hello madras mobile banner 1200x300

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9ம் தேதி அரசு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை 29, அக்டோபர் 2026: 2026 ஆம் ஆண்டு தீபாவளி வரும் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப் படும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசனை வெளியிட்டுள்ளது.

தீப ஒளி பண்டிகை நவம்பர் மாதம் 8ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் படுகிறது. இப்பண்டி கையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத் தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு வசதியாக சி றப்பு, ரயில் உள் ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்பு வதற்கு ஏதுவாக, மறு நாள் (நவ.9) திங்கட் கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவ னங்களுக் கும் விடு முறை அளிக்கப்படுவ தாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தின ருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு சிரமமின்றி திரும்பு வதற்காக இந்த நட வடிக்கை மேற் கொள் ளப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 9ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் நவம்பர் 28ம் தேதி பணி நாளாக செயல்படும் என தமிழ் நாடு அரசு தெரிவித் துள்ளது.

தீபாவளி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப் பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் திங்கள்கிழமையும் விடு முறையைச் செல விட்டு விட்டு, தங்களது பணி யிடங்களுக்குத் திரும்பு வதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளதாகக் கூறப் படுகிறது. மேலும், மக்கள் ஒரே நேரத்தில் திரும்பு வதால் ஏற்படும் போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்கவும் இந்த விடுமுறை உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Read the full e-paper

Translate »