சென்னை 29, அக்டோபர் 2026: பாரத் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண் காட்சியை, நவம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
2026, 2 முதல் 5 நவம்பர் 2026 வரை மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடை பெறவுள்ளது
இந்த உச்சி மாநாட் டில், 130-க்கும் மேற் பட்ட நாடுகள் பங்கேற் கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முதலீட் டாளர்கள், தொழில் துறை, புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஆஸ்திரேலியா, ª ட ன் ம £ ர் க் , ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன் ஆகியவை இந்தியாவின் நட்பு நாடுகளாகப் பங்கேற்கின்றன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள் ளிட்ட பதின்மூன்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த உச்சிமாநாட்டில் பங் கேற்று, தங்களின் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், முதலீட்டு வாய்ப்புகள், உற்பத்தித் திறன்களை வெளிப் படுத்தும்.
