சென்னை 28, அக்டோபர் 2026: இந்தியா – இந்தோ னேசியா இடையே யான கூட்டுச் சிறப்புப் படைகள் பயிற்சியான கருடா சக்தியின் 11-வது பதிப்பு இந்தோனேசி யாவின் பேன்யூவாங்கி யில் தொடங்கியது.
இப்பயிற்சி 2026 அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறு கிறது. இந்தியக் குழுவில் பாராசூட் படைப் பிரிவின் (சிறப்புப் படைகள்) வீரர்களும் இந்தோ னேசியக் குழுவில் இ ந்தோனேசியச் சிறப்புப் படை வீரர் களும் இடம்பெற் றுள்ளனர்.
இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக் கிடையே பரஸ்பர புரிந் துணர்வு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல் பாட்டுத் திறன் ஆகிய வற்றை வலுப்படுத்து வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இப் பயிற்சியில் தடை தாண்டுதல், போர் களத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுதல், மலையேறுதல், வான்வழி தாக்குதல் பயிற்சி, போர் பயிற்சி களை வலுப்படுத்துதல் உட்பட வனம் சார்ந்த சூழல்களில் சிறப்பு நடவடிக்கைகளுக்கான உத்திகள், நுட்பங்கள், செயல்முறைகள் ஆகிய வற்றில் கவனம் செலுத் தப்படுகிறது. அத்துடன் ஆயுதங்கள், உபகரணங் கள், செயல் நடவடிக் கைகள் தொடர்பான நிபுணத் துவம், தகவல் பரிமாற்றம் ஆகியவை யும் இப் பயிற்சியில் இடம் பெறும்.
இக்கூட்டுப் பயிற்சி யானது இரு குழுக் களின் ஒருங்கிணைப்பு போன்றவற்றின் மதிப் பீட்டு பயிற்சியுடன் நிறைவடையும். இப் பயிற்சி இந்தியா – இந்தோனேசியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.
