hello madras mobile banner 1200x300

இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல்கள் கொழும்பு சென்றடைந்தது

சென்னை 28, அக்டோபர் 2026: இந்தியக் கடற்படை யின் முதலாவது பயிற்சிக் குழுவைச் சேர்ந்த ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா ஆகிய போர்க்கப்பல் களும், இந்தியக் கடலோரக் காவல் படையின் சாரதி கப்பலும் 2026 அக்டோபர் 26 அன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத் தை சென்றடைந்தன. கடற்படை இசைக் குழுவின் மரியாதை யுடன் இலங்கை கடற்படை சார்பில் இக்கப்பல்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இத்துறைமுகப் பயண மும் தொடங்கியது. இப்பயணம் இரு நாட்டு கடற்படை களுக்கு இடையே யான தொழில்சார்ந்த தொடர்புகளுக்கும், முதலாவது பயிற்சிக் குழுவில் கடற்பயிற்சி ª பற்று வரும் பயிற்சி மாலுமிகளுடனான கலந்துரையாடல் களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இலங்கை கடற் படையின் கடற்படைப் பயிற்சி தலைமை இயக்குநர், கிழக்கு கடற்படைப் பிராந் தியத் தளபதி ஆகியோர் கப்பலில் இருந்த பயிற்சி மாலுமிகளுடன் கலந் துரையாடினர். இக் கலந்துரையாடல் மாலுமிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தொழில்முறை கடற் படைப் பயிற்சிகள் குறித்த கண்ணோட்டங் களைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப் பளித்தது.

இத்துறைமுகப் பயணத்தின் போது, இரு கடற்படைகளை யும் சேர்ந்த வீரர்கள் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை மற்றும் பயிற்சி சார்ந்த நட வடிக்கைகளில் ஈடு படுவர். இந்நடவடிக் கைகள் வீரர்கள் தங்களின் தொழில்சார் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக் கொருவர் நடைமுறை கள் மற்றும் செயல் பாட்டு உத்திகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதுடன், இரு கடற்படைகளுக் கும் இடையே பரஸ்பர புரிதலை வளர்த்து ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »