சென்னை 28, அக்டோபர் 2026: பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாட்டில் உள்ள இளையோரின் விரிவான தொலை நோக்குப் பார்வையை யும், துணிச்சலான மன உறுதியையும் அவர் பாராட்டினார்.
இந்திய இளைஞர் களின் சிந்திக்கும் விதமும், முன்னேற்றத் திற்கான அவர்களது தன்னம்பிக்கையும், உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு நடைபெற்ற மாநாட் டில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்த அவர், கடந்த பத்தாண்டு களில், புதிய இந்தியா விற்கான நடவடிக்கை களுடன் ஒப்பிட்டுப் பே சினார். இந்த புதிய மனநிலை, அசல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும், உலகளவில் புதிய வழிகளை அமைப்பதை யும், சர்வதேச அளவில் சவால்களுக்குத் தீர்வு காண்பதையும் நோக்க மாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப் பிட்டார்.
நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்து வதற்கும், அவற்றை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கும், உள்நாட்டிலேயே கோவிட்-19 தொற்றுக் கான தடுப்பூசிகளை உருவாக்கியதையும், முதல் முயற்சியிலேயே இந்தியா செவ்வாய் கிரகத்தை அடைந்ததை யும், இதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதையும் மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டிற்கான ஒரு துணிச்சலான தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையை எடுத் துரைத்தார். இந்தியா எதிர்காலத் தொழில் நுட்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், துணிச்சலுடன் புது¬Ñ களைப் புகுத்த வேண் டும், மேலும் அவற்றை உருவாக்குவதில் உலகிற்கு முன்னோடி நாடாகத் திகழ வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தினார்.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு, எண் முறை முதல் வானியல் வரை இந்தியாவின் வளமான கண்டு பிடிப்புப் பாரம்பரி யத்தை எடுத்துரைத்த அவர், கடந்த ஆண்டில், பல சாதனை கள் மூலம் இவை நிரூபிக்கப்பட்டுள்ளதா கத் தெரிவித்தார். இந்த அறிவியல் பாரம்பரியத் தை நவீன தொழில் நுட்பம் மற்றும் புதுப் பிக்கப்பட்ட நம்பிக்கை யுடன் இந்தியா முன் னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 30 அன்று டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த தினத்தை நாடு கொண்டாடவுள்ள நிலையில், அவர் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த தனது ஆய்வை அணு சக்தித் துறையிலிருந்து தொடங்கத் தேர்ந் தெடுத்ததை சுட்டிக் காட்டிய பிரதமர், எனவே, அணுசக்தி யிலிருந்து தொடங்கு வோம், என்று கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டு வதற்கு மிகப்பெரிய அணுசக்தித் திறன் தேவைப்படுகிறது என்றும், இறக்குமதி செய்யப்படும் அணு எரிபொருளைச் சார்ந் திருப்பது எரிசக்திப் பாதுகாப்பிற்கு சவாலாக அமைகிறது என்றும் அவர் கூறினார்
