hello madras mobile banner 1200x300

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு

சென்னை 28, அக்டோபர் 2026: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீ காரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் அன்பில் மகேஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இ ந்நிலையில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தார். அதில்; லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. சட்டவிரோத மாக பயன்பெறும் வகையில் செயல்பட்ட தாகவோ தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தனியார் பள்ளிகள் கோரிக்கை மீது பள்ளிக் கல்வித் துறை வழக்கமான நிர்வாக ரீதியான நட வடிக்கையே எடுத்தது. தனது பெயரை தவறாக பயன்படுத்தி, பணம் வசூலித்துள்ள தற்கு என்னை பொறுப் பாக்க முடியாது; கணைய அழற்சி நோயால் பாதித் துள்ள தனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப் படுவதால் ஜாமீன் வழங்குக என்று கோரிக் கை விடுத்துள் ளார். ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு வரும் வியாழன் அன்று விசாரணை வர உள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »