சென்னை 28, அக்டோபர் 2026: 2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நடைபெற வுள்ள முதல் பொதுத் தேர்தல் என்பதால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என்பதைத் தீர்மானிக் கும் முக்கியத் தேர்த லாக இது பார்க்கப் படுகிறது.
இஸ்ரேல் நாடாளு மன்றத்தில் உள்ள 120 இடங்களுக்கான தேர்த லில், பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகு தலை மையிலான லிகுட் கட்சி போட்டியிடு கிறது. முன்னாள் ராணுவத் தளபதியும் யாஷார் கட்சியின் தலைவருமான காடி ஐசன்காட், ªரூதன் யாகுவுக்குப் பிரதான போட்டியாளராகக் கருதப்படுகிறார். ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுடனான இஸ்ரேலின் உறவுகள், நா ட்டின் பாதுகாப்பு, பொருளாதார நிலை மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இரு தரப்பினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் நெதன் யாகு கடைப்பிடிக்கும் கடுமையான அணுகு முறைக்கு நெருக்கமான நிலைப்பாட்டையே காடி ஐசன்காட் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் வெற்றி பெற்றா லும் காசா தொடர் பான இஸ்ரேலின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது. இவர் களைத் தவிர, டுகெதர் கட்சியைச் சேர்ந்த நப்தாலி பென்னட், முன்னாள் பிரதமர் யாயிர் லபிட் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த யாயிர் கோலன் ஆகியோரும் அரசியல் களத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இஸ்ரேல் தேர்தல் முறையைப் பொறுத்த வரை, வாக்காளர்கள் தனிப்பட்ட வேட்பா ளர்களுக்கு அல்லாமல் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர். கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற இடங் கள் ஒதுக்கப்படு கின்றன.
மொத்தமுள்ள 120 இடங்களில் குறைந்த பட்சம் 61 இடங்களின் ஆதரவைப் பெறும் கட்சி அல்லது கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியும். எனவே, இத்தேர்த லுக்குப் பிறகும் கூட்டணி ஆட்சியே அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்பு களில் காடி ஐசன்காட் முன்னிலையில் இருப்ப தாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
அதே வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெதன்யாகு வுக்கு ஆதரவு தெரிவித்துள் ளார். மேற்காசியாவில் ஏற்கெனவே பதற்ற மான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ் ரேல் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் பாது காப்புக் கொள்கை, காசா போர் மற்றும் ஈரானுடனான உறவுகள் உள்ளிட்ட விவகாரங் களில் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடும் என்ப தால், சர்வதேச அளவில் இத்தேர்தல் பெரும் கவ னத்தைப் பெற்றுள்ளது.
