சென்னை 28, அக்டோபர் 2026: சிக்மா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நேட்டோ வாடிக்கை யாளர் ஒருவருக்காக பேஸ் ப்ளீட் (பிபி) யூனிட்களைத் தயா ரித்து வழங்குவதற்கான, யூஎஸ்டி 102.23 மில்லியன் (ரூ.973.64 கோடி) மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள் ளது. இந்த ஆர்டர் 12 மாத காலத்திற்குள் செயல்படுத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது. 155மிமீ பீரங்கித் தோட்டா உற்பத்தி மதிப்புச் சங்கிலி முழுவதும் தனது திறன் களை விரிவுபடுத்துவதற் கான நிறுவனத்தின் உத்தியில் இந்த ஆர்டர் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
சிக்மா நிறுவனம் தனது பாதுகாப்புத் துறை உற்பத்தித் திறன் களைத் தொடர்ந்து வ லுப் படுத்தி வரும் நிலையில், பேஸ் ப்ளீட் அலகுகளைத் தனது தயாரிப்புப் பட்டியலில் இணைத்திருப்பது, ஏற்கெனவே 155 மி.மீ. பீரங்கிக் குண்டுகள் மற்றும் ஃபியூஸ்கள் தயாரிப்பில் கொண் டுள்ள திறன்களை மேலும் விரிவுபடுத்து கிறது. இந்த முன் னேற்றம், உற்பத்தித் துறையில் தனது நிபுணத்துவத்தை ஆழப்படுத்துதல், தயாரிப்புப் பிரிவுகளை விரிவுபடுத்துதல் மற்றும் உலகளாவிய பீரங்கி வெடிமருந்துச் சந்தைக்கு மேலும் ஒருங் கிணைந்த தயாரிப்புத் தீர்வுகளை உருவாக்கு தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நிறுவனத்தின் உத்தி யைக் ( strategy ) பிரதி பலிக்கிறது.
பேஸ் ப்ளீட் யூனிட் என்பது பீரங்கி எறி கணைகளின் காற் றியக்கச் செயல்திறனை மேம்படுத்தவும் அவற்றின் பயனுள்ள வரம்பை நீட்டிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த தோட்டா பாகமாகும். ஒரு பீரங்கிக் குண்டின் பின் பகுதியில் ஒருங் கிணைக்கப்படும் இந்த யூனிட், பறக்கும்போது ஒரு கட்டுப்படுத்தப் பட்ட வாயு ஓட்டத்தை உருவாக்குகிறது. இது எறிகணைக்குப் பின் னால் உள்ள குறைந்த அழுத்தப் பகுதியால் ஏற்படும் காற்றியக்க இழுவையைக் கு¬ழூக் கிறது. பேஸ் ப்ளீட் தொழில்நுட்பம் நவீன 155 மிமீ பீரங்கித் தோட்டாக்களில் பரவ லாகப் பயன்படுத்தப் படுகிறது. மேலும் இது நீண்ட தூர பீரங்கி அமைப்புகளின் வரம் பையும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்து வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஆர்டர், பீரங்கி வெடிமருந்து உற்பத்தித் துறையில் சிக்மா நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், மேம்பட்ட 155 மி.மீ. பீரங்கி வெடிமருந்து களுக்கான முழுமை யான உள்நாட்டு உற்பத்தித் திறன்களை உருவாக்குவதற்கான மற்றொரு முக்கிய முன்னேற்றமாகவும் அமைகிறது.
