சென்னை 24, அக்டோபர் 2026: இந்தியத் திரையுலகில் திகில் திரைப்படங்கள் என்றாலே நகைச் சுவையைக் கலந்து வழங்கும் வழக்கம் அதிகரித்துள்ள நிலை யில், பார்வையாளர் களை உண்மையிலே யே அச்சத்தில் ஆழ்த் தும் முயற்சியாக வெளியாகியிருக்கிறது 418. கேஜிஎஃப், சலார் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கியிருக்கும் இப்படம், வெளியீட் டுக்கு முன்பே தனது திகிலூட்டும் காட்சி கள் குறித்த செய்தி களால் கவனம் பெற்றது. பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு திரையரங்கு களில் வெளியாகி யுள்ள இப்படம், மர்மம் நிறைந்த ஒரு விடுதி, அமானுஷ்ய நிகழ்வுகள், மறைக்கப் பட்ட கடந்தகாலம் என ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறது.
மர்மம் நிறைந்த அறை 418!
நடுத்தரக் குடும்பத் தைச் சேர்ந்த விவேக் சங்கர் என்ற மருத்துவக் கல்லூரி மாணவராக சூ ர்யா ராஜ் வீரபதா பினி நடித்துள்ளார். மகனின் கல்விச் செல வுக்காக வீட்டையே அடமானம் வைத்திருக் கும் அவரது பெற்றோர், கர்நாடகக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள விஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியின் புதுப்பிக் கப்பட்ட ஆண்கள் விடுதியில் மகனைச் சேர்க்க அழைத்துச் செல்கின்றனர்.
ஆனால், அந்த விடுதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் வரலாறு மிகவும் பயங்கரமானது. 15 ஆண்டுகளாகப் பூட்டப் பட்டிருந்த அந்தக் கட்டடம், ஒரு காலத்தில் மனநலக் காப் பகமாகச் செயல் பட்டது. அங்கு நிகழ்ந்த கொடூரமான கொலை கள் அதன் கடந்தகாலத் தை மர்மமாக்கியுள்ளன. விடுதிக்குள் பெண்கள் நுழையத் தடை விதிக் கப்பட்டிருப்பதுடன், 418-ஆம் எண் அறை யும் யாரும் நெருங்கக் கூடாத இடமாகப் பாதுகாக்கப்படுகிறது. விடுதியில் தங்கிய சில நாட்களிலேயே விவேக்கிற்கு விசித்திர மான அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. அவை அவரது மன நிலையையும் அமைதி யையும் பாதிக்கின்றன. கல்லூரியின் மூத்த ஆலோசகரிடம் விளக்கம் தேடியும் தெளிவு கிடைக்காத தால், விவேக்கும் அவரது அறைத் தோழரும் மர்மத்தின் பின்னணியை ஆராயத் தொடங்குகின்றனர். அதன்பிறகு விரியும் சம்பவங்களே படத்தின் ¬Ñயக்கதை.
தீர்ப்பு: குறைகள் இருந்தாலும் கவனிக்கத் தக்க திகில் முயற்சி!
திகில், மர்மம், உளவியல் அச்சம், மனித உணர்வுகள் ஆகியவற்றை ஒருங் கிணைக்க முயன்றுள்ள 418, இயக்குநர் கீர்த்தன் நாககௌடாவின் குறிப் பிடத்தக்க முயற்சியாக அமைகிறது. சூர்யா ராஜ் வீரபதாபினி, சைத்ரா ஆச்சார், ப்ரீத்தி பகடாலா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப் பும், தினேஷ் திவாகர னின் ஒளிப்பதிவும், வெங்கி ஜிஜியின் இசையும் படத்தின் பலமாக உள்ளன.
மொத்தத்தில், பயத்தை மட்டுமல்லா மல் அதன் பின்னால் மறைந்திருக்கும் மனித வலியையும் பேச முயலும் வித்தியாசமான திகில் திரைப்படம் 418!
418 திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்யா ராஜ் வீரபதாபினி, ப்ரீத்தி பகடாலா, ஷஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர். கீர்த்தன் நாககௌடா இயக்கியுள்ள இப்படத் தை ரவி சங்கர் யால மஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் தயாரித்துள்ளனர். பிரசாந்த் நீல் இப்படத் தை வழங்கியுள்ளார். வெங்கி ஜிஜி இசை யமைத்துள்ள இப்படத் திற்கு உல்லாஸ் ஹைதூர் கலை வடி வமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை டி'ஒன் சுரேஷ் சந்திரா கவனிக்கிறார்.
