hello madras mobile banner 1200x300

12 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகு சீனா – வடகொரியா இடையே யாலு ஆற்று பாலம் திறப்பு

சென்னை 17, அக்டோபர் 2026: 12 ஆண்டுகால தாமதத்துக்கு பிறகு சீனா, வடகொரியா இடையேயான ஆற்று பாலம் நேற்று திறக்கப்பட்டது. சீனாவின் வடகிழக்கு நகரமான டான்டாங் கை, வடகொரியா வின் சினுயிஜூ நகருடன் இணைக்கும் விதமாக யாலு ஆற்றின் குறுக்கே கடந்த 1937-1943ம் ஆண்டுகளுக்கிடை யே ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பழமையான பாலம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படு கிறது. இருப்பினும், சாலை போக்கு வரத்தை பொறுத்த வ ரை ஒருவழிப்பாதை மட்டுமே கொண்ட தாகவும் இது இயங்கி வருகிறது.

சீனா, வடகொரிய இடையே 70 சதவீத வர்த்தகம் இந்த பழமை யான பாலம் வழியாக வே நடைபெற்று வரும் நிலையில், இதற்கு மாற்றாக புதிய பாலம் கட்ட முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, சீனாவின் டான்டாங் நகரையும், வடகொரி யாவின் சினுயிஜூ நகரையும் இணைக்க யாலு ஆற்றின் மீது புதிய பாலம் கட்டப் பட்டது. 3 கிமீ நீளம் (3,206 மீட்டர்) கொண்ட 4 வழிச் சாலை பாலம் புதிய பாலம் சீன அரசின் நிதியுதவியுடன் கடந்த 2014ம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப் பட்டது.

ஆனால், வட கொரியா தரப்பில் அதன் பகுதியில் சுங்க சாவடிகள், பாதுகாப்பு உள்கட்டமைப்புகள், அணுகு சாலைகள் ஆகியவற்றை அமைப் பதில் காலதாமதம் செய்து வந்தது. இத் தகைய காரணங்களால் யாலு ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய பாலத்தை திறப்பதில் காலதாமதம் நீடித்து வந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு யாலு ஆற்று பாலம் நேற்று வெற்றிகரமாக திறந்து வைக்கப் பட்டது. இது இரு நாடு களிடையே பொருளா தாரம், வர்த்தக பரிமாற் றங்களை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »