hello madras mobile banner 1200x300

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்துவரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான கூடுதல் வரிவிதிப்பு முடிவு நிறுத்தி வைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சென்னை 18, அக்டோபர் 2026: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான கூடுதல் வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா வின் போருக்கான நிதி ஆதாரங்களை முடக் கும் நோக்கில், வாஷிங் டனில் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பெயரிலான புதிய பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்க நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ரஷ்யா வி டமிருந்து எண்ணெய் மற்றும் காஸ் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை அபராத வரி விதிக்க இந்தச் சட்டம் வகை செய்தது.

இதனால் ரஷ்யா வுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட 10 நாடு களுக்கு கடுமையான பொருளாதார நெருக் கடி ஏற்படும் சூழல் உருவானது. ஏற்கென வே இந்தியாவில் இருந்து செல்லும் பொருட்கள் மீது அமெரிக்கா விதித் துள்ள 10 சதவீத வரி யுடன், இந்த கூடுதல் வரியும் சேர்ந்தால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது. இந்தச் சூழலில், புதிய கட்டுப்பாடுகள் நடை முறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக வரிகள் மற்றும் பொரு ளாதாரத் தடைகளை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கிரஹாம் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வரிகள், தடைகள் மற்றும் கட்டுப்பாடு களைச் செயல்படுத்து வதில் இருந்து விலக்கு அளிக்கிறேன். அமெரிக்க நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தளர்வு வழங்கப்படு கிறது என்பதை நாடாளுமன்றத்திற்கு முறைப்படி தெரிவித் துள்ளேன்’ என்று குறிப் பிட்டுள்ளார். அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவால் இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகப்பெரிய வர்த்தக நிம்மதி கிடைத்துள்ள தோடு, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவி வந்த நிச்சயமற்ற சூழலும் முடிவுக்கு வந்துள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »