hello madras mobile banner 1200x300

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 8 ஆண்டுகளில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

சென்னை 18, அக்டோபர் 2026: தற்போது சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் விண் வெளிப் பொருளா தாரம், அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டு களில் 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புது தில்லியில் பு ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா தனது தொழில்நுட்பத் திறன் களை வெளிப்படுத்து வதைத் தாண்டி, உலக அளவில் போட்டித் தன்மை வாய்ந்த வர்த்தக விண்வெளி நிறுவனங்களைக் கட் டமைப்பதாக கூறினார். இந்திய நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், உலகச் சந்தைகளில் அவற்றின் இருப்பை விரிவாக்குவதற்கும், அதிக முதலீடு, விரை வான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் ஆகியவை இன்றியமையாதவை என்று அவர் வலியுறுத் தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் யூலைமை யில் 2019-2020-ல் இந்தி யாவின் விண்வெளித் துறை தனியார் பங்கேற் புக்கு அனுமதிக்கப்பட் டதன் விளைவாக, வெறும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன் கள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் கூறினார். கணிசமான தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு, நீண்ட கால அர்ப் பணிப்பு தேவைப்படும் ஒரு துறையில், அரசு நிறுவனங்களையும் தனியார் தொழில்துறை யையும் ஒன்றிணைப் பதன் ஆற்றலை இந்தியாவின் அனுபவம் நிரூபிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »