hello madras mobile banner 1200x300

ரத்னகிரியில் மொபைல் நெட்வொர்க் சேவையின் தரம் குறித்து டிராய் சோதனை

சென்னை – 6 நவம்பர், 2026 மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ( Vi) ஆகிய நிறுவனங்களின் மொபைல் சேவைகளை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ( TRAI) ஆய்வு செய்தது. 2026 செப்டம்பர் 8 முதல் 11 வரை நகர்ப்புறங்கள், நெடுஞ்சாலைப் பகுதிகள் உட்பட 11 முக்கிய இடங்களில் 2 ஜி முதல் 5 ஜி வரையிலான சேவைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.

முடிவுகள்:

பதிவிறக்க வேகம்: ஜியோ 134.77 எம்பிபிஸ் ( Mbps), ஏர்டெல் 113.81, விஐ 38.93, பிஎஸ்என்எல் 4.42.

அழைப்புத் துண்டிப்பு: ஏர்டெல் 15/301, பிஎஸ்என்எல் 32/338, ஜியோ 10/397, விஐ 12/339.

சிக்னல் குறைபாடு: ஜியோவில் குறைவாகவும், ஏர்டெலில் அதிகமாகவும் பதிவானது.

அழைப்புத் தரம், குரல் இடையூறு, சிக்னல், இணைய வேகம் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டன. முடிவுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கப்பட்டு, சேவைகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு அறிக்கை: www.trai.gov.in என்ற தளத்தில் உள்ளது.

Read the full e-paper

Translate »