hello madras mobile banner 1200x300

கிம்பர்லி மாநாட்டையொட்டி உலக வைர வர்த்தகத்தில் இந்தியா புதிய முன்முயற்சி

சென்னை – 6 நவம்பர், 2026 வைர வர்த்தகம் தொடர்பான கிம்பர்லி செயல்முறையின் 2026- ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலக வைரத் தொழில்துறையின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து நவம்பர் 3- ம் தேதி அங்கோலாவின் லுவாண்டாவில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. வைர வர்த்தகத்திற்குள் முறைகேடுகளைத் தடுப்பது, பொறுப்பான வைரக் கொள்முதல், வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆப்பிரிக்க வைர உற்பத்தி நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியா ஏடிபிஏ அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவின் ஜிஜேஇபிசி அமைப்புக்கும் ஏடிபிஏ-வுக்கும் இடையே வைர வர்த்தகம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் வைர மதிப்பீடு, தரம் பிரித்தல், உற்பத்தி, தொழில்நுட்பப் பயிற்சி, வர்த்தக முதலீடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

முக்கிய நிகழ்வு: நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை புதுதில்லியில் உலக கிம்பர்லி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 29- ம் தேதி வைர வர்த்தகக் கருத்தரங்கம் நடைபெறும்.

நம்பிக்கை, விதிமுறைகளைப் பின்பற்றுதல், நம்பகத்தன்மை ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் உலக வைர வர்த்தகத்தை மேம்படுத்துவதே இந்தியாவின் நோக்கம்.

Read the full e-paper

Translate »