hello madras mobile banner 1200x300

மத்திய அரசின் திட்டங்களால் குடும்பங்களின் மருத்துவச் செலவு சுமை பெருமளவு குறைந்துள்ளது

சென்னை – 16 நவம்பர், 2026 இந்தியாவில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவைகள் கிடைக்கச் செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023–24-ம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரக் கணக்கீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது.

அரசின் செலவு உயர்வு:

கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மேற்கொள்ளும் சுகாதாரச் செலவுகள் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2013–14-ம் ஆண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த இச்செலவு, 2023–24-ம் ஆண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

குடும்பங்களின் மருத்துவச் செலவுச் சுமை குறைவு:

மக்கள் தங்கள் கையிலிருந்து நேரடியாகச் செலுத்தும் மருத்துவச் செலவின் பங்கு, மொத்த மருத்துவச் செலவில் 2013–14-ம் ஆண்டு 64.2 சதவீதமாக இருந்தது. இது 2023–24-ம் ஆண்டில் 42.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, 21.5 சதவீதம சரிந்துள்ளது. 2022–23-ம் ஆண்டில் 43.4 சதவீதமாக இருந்த இது, அடுத்த ஆண்டில் மேலும் குறைந்துள்ளது.

தனிநபர் மருத்துவச் செலவு:

ஒரு நபருக்காக அரசு செலவிடும் மருத்துவத் தொகை, 2013–14-ம் ஆண்டில் ₹1,042 ஆக இருந்தது. இது 2023–24-ம் ஆண்டில் ₹2,959 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பும் 14.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆரம்ப சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி:

Read the full e-paper

Translate »