hello madras mobile banner 1200x300

மகாராஷ்டிராவில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு

சென்னை – 16 நவம்பர், 2026 மகாராஷ்டிராவில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு.

மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (15.11.2026) பங்கேற்றார். சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பழங்குடியின மக்களின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதே பழங்குடியினர் கௌரவ தினத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். பழங்குடியின வீரர்களின் தியாகங்களை நாடு நினைவுகூர்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021 நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டம் இப்போது தேசியத் திருவிழாவாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின்போது 2 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

Read the full e-paper

Translate »