hello madras mobile banner 1200x300

மக்களின் நடைபாதை ஆக்கிரமிப்பு; உணவு டெலிவரி ரோபோவை வழிமறித்த 78 வயது பேராசிரியை கைது: போராட்டம் தொடரும் என எச்சரிக்கை

சென்னை – 2 நவம்பர், 2026 நடைபாதையை இயந்திரங்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்து உணவு டெலிவரி செய்யும் ரோபோக்களை தொடர்ந்து வழிமறித்து போராட்டம் நடத்திய 78 வயது ஓய்வுபெற்ற பெண் பேராசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கரோலின் மார்வின் (78). அந்நாட்டின் பிலடெல்பியா நகரில் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் தானியங்கி உணவு டெலிவரி ரோபோக்கள் நடைபாதைகள் மற்றும் சாலைகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த ரோபோக்கள் ஏழை விநியோக ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும், நடைபாதைகளை ஆக்கிரமித்து கேமராக்கள் வழியே மக்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீதிக்கு வந்த பேராசிரியர் கரோலின் மார்வின், நடைபாதையில் சென்ற டெலிவரி ரோபோவின் முன்பாக சுமார் 15 நிமிடங்கள் நின்று அதன் பயணத்தை மறித்துப் போராடினார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பொது ஒழுங்குக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி கரோலினை கைது செய்தனர். எனினும் இந்த நடவடிக்கைக்கு அஞ்சாத அவர், ‘ரோபோவை விட எனக்கு அதிக உரிமை இருப்பதாக நம்புகிறேன்; நான் மனிதர்களைத் தடுக்கவில்லை, ஆக்கிரமிப்பு இயந்திரத்தைத்தான் தடுத்தேன்; பெருநிறுவனங்கள் நமது பொதுவெளியை ஆக்கிரமிப்பதை எதிர்த்து எனது போராட்டம் மீண்டும் தொடரும்’ என்று சூளுரைத்துள்ளார்.

Read the full e-paper

Translate »