சென்னை – 2 நவம்பர், 2026 ••••••••••••••••••••••••••••••••
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.11.2026), தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II & IIA நடைபெற்றுவரும் தேர்வுகள் மையத்தினை மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II & IIA தேர்வுகள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 47 தேர்வு மையங்களில் 12537 தேர்வாளர்கள் விண்ணப்பித்து 10393 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். 2204 (17%) தேர்வாளர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு பணிக்கென துணை வட்டாட்சியர் நிலையில் 12 இயங்கு குழுக்களும் (Mobile Team), துணை ஆட்சியர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்களும், 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்விற்காக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.திருமணி ஸ்டாலின் உடனிருந்தனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி
