hello madras mobile banner 1200x300

பீரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறி, ஆன்லைன் மூலம் ரூ.17,60,440/- அபகரித்த வழக்கில், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரால் ஒருவர் மேற்கு வங்காளத்தில் கைது.

சென்னை – 10 நவம்பர், 2026 சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கீர்த்திவாசன், வ/34, என்பவரை கடந்த 23.04.2026 அன்று செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்களுக்கு பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்க உள்ளதாகவும், அதில் நிறைய சலுகைகள் உள்ளதாகவும் என ஆசை வார்த்தைகள் கூறி, வாட்சப் மூலம் ஒரு Link அனுப்பி, அதில் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்தால் விரைவில் பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறியதாகவும், இதனை நம்பிய கீர்த்திவாசன் அந்த Link ல் அவரது வங்கி கணக்கு மற்றும் பிற விபரங்களை பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த நபர், மறுநாள் (24.06.2026) ஒரு செல்போனை கீர்த்திவாசனுக்கு அனுப்பி, 2 step Verifucationக்காக அந்த செல்போனில் உங்களது சிம் கார்டை பொருத்துமாறு கூறியதின்பேரில், கீர்த்திவாசன் புதிய செல்போனில் அவரது சிம் கார்டை பொருத்திய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 இலட்சம் பணம் மற்றும் அவரது கிரெடிட் கார்டு மூலம் ரூ.7,60,440/- ஆன்லைன் பணபரிவர்த்தனை என மொத்தம் ரூ.17,60,440/- அபகரித்தது தெரியவந்ததாகவும், மேற்படி மோசடி செய்த நபரை கண்டுபிடித்து, தனது பணத்தை மீட்டுத் தருமாறும் கீர்த்திவாசன் தேசிய சைபர் கிரைம் புகார் இணையத்தில் புகார் பதிவு செய்து பின்னர் சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன் எண்களை கொண்டு தீவிர விசாரணை செய்ததில் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததின்பேரில், காவல் குழுவினர் மேற்குவங்காளம் மாநிலம் சென்று, அங்குள்ள காவல் நிலைய போலீசார் உதவியுடன் கண்காணித்து, மேற்படி மோசடியில் தொடர்புடைய எதிரி அபுல் உசேன் ஷேக், வ/26, நவ்தா, முர்ஷிதாபாத், மேற்கு வங்காளம் மாநிலம் என்பவரை 06.11.2026 அன்று கைது செய்து, முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் எதிரி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட எதிரி அபுல் உசேன் ஷேக் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.11.2026) சைதாப்பேட்டை குற்றவயில் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Read the full e-paper

Translate »