hello madras mobile banner 1200x300

எஸ்பிளனேடு பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி பணம் பறித்துச் சென்றவர் கைது. பணம் ரூ.500/-மீட்பு.

சென்னை – 10 நவம்பர், 2026 சென்னை, புதுப்பேட்டை, லேங்ஸ் கார்டன் தெருவில் வசித்து வரும் புருஸ்தம் கோராய், வ/23, என்பவர் தனியார் கம்பெனியில் பேக்கிங் வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த 06.11.2026 அன்று மாலை அவரது நண்பருடன் வேலை முடித்து எஸ்பிளனேடு, போஸ்ட் ஆபிஸ் தெரு அருகே, நடந்து சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் அவர்ளை வழிமறித்து மது வாங்க பணம் கொடு என மிரட்டியதாகவும், அதற்கு புருஸ்தம் கோராய் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என கூறியபோது, அந்த நபர் மற்றும் அவருடன் இருந்த 3 நபர்கள் சேர்ந்து அவர்களை தாக்கி, புருஸ்தம் கோராய் கையில் வைத்திருந்த பணம் ரூ.1,000/-ஐ பறித்து கொண்டு தப்பிச் சென்றதாகவும், தாக்குதலில்.காயமடைந்த புருஸ்தம் கோராய் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேற்படி சம்பவம் குறித்து B-2 எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

B-2 எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய சஞ்சய், வ/19, மூர் தெரு, மண்ணடி, சென்னை என்பவரை 07.11.2026 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் பணத்தில் செலவு செய்தது போக மீதி பணம் ரூ.500/- மீட்கப்பட்டது.

விசாரனணயில் எதிரி சஞ்சய் மீது ஏற்கனவே, வழிப்பறி வழக்கு உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்த்து.

கைது செய்யப்பட்ட எதிரி சஞ்சய் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read the full e-paper

Translate »