சென்னை – 7 நவம்பர், 2026 நாடு முழுவதும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரச்சாரம் தொடக்கம்: முதல் ஐந்து நாட்களில் 40 லட்சம் சான்றிதழ்கள் உருவாக்கி சாதனை.
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஐந்தாவது டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஐந்து நாட்களில் சுமார் 40 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதியோர் எளிதில் சான்றிதழ் பெறும் வகையில் முக அடையாள அங்கீகாரத் தொழில்நுட்பப் பயன்பாடு கடந்த ஆண்டை விட 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதியோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி உள்ளதாகத் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களின் அனுபவமும் ஆற்றலும் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதற்கு மிகவும் அவசியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார். முதியோர்கள் வங்கிகளுக்கோ அலுவலகங்களுக்கோ செல்லாமல் தங்களது கைப்பேசி மூலமாகவே முக அடையாள அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழை எளிதாகப் பெற முடியும்.
மத்திய ஓய்வூதியத்துறை செயலாளர் நிவேதிதா சுக்லா வர்மா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த இயக்கத்தின் கீழ், முதியோர்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிப்போரின் வசதிக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுடன், நேரில் வர இயலாத முதியோர்களின் இல்லங்களுக்கே சென்று சேவை வழங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
