hello madras mobile banner 1200x300

ஆயுஷ்மான் பாரத் திட்ட செயலாக்க மேம்பாடு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் தேசிய சுகாதார ஆணையம் ஆய்வு

சென்னை – 7 நவம்பர், 2026 ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், டிஜிட்டல் சுகாதார ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துதல் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரி சுனில் குமார் பர்ன்வால், சுகாதாரத்துறையில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தி திட்டங்களின் செயலாக்கத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சுகாதார சேவைகளில் வெளிப்படைத்தன்மையைக் மேம்படுத்துதல், போலி உரிமைகோரல்களைத் தடுத்தல், டிஜிட்டல் நடைமுறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Read the full e-paper

Translate »