சென்னை 18, அக்டோபர் 2026: ஹார்முஸ் மற்றும் ருமேனிய கடற்பகுதி யில் தாக்கப்பட்ட சரக்குக் கப்பல்களில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பாது காப்பாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது.
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத் திற்கு மத்தியில், சர்வ தேசக் கடல் வழித் தடங்களில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது அடுத் தடுத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்கு தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 11ம் தேதி ஓமன் கடற்பகுதியில் நடந்த ட் ரோன் தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் மாயமான நிலையில், பிற கப்பல் களில் இருந்த ஊழியர் கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த அபாயகரமான சூழலில், கடந்த 16ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி கடற்பகுதியில் 15 இந்திய மாலுமி களுடன் சென்ற எம்.டி. எஸ்.டி 3 என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீதும், அதற்கு முன்ன தாக 14ம் தேதி ருமேனியாவின் சுலினா பகுதியில் 9 இந்திய மாலுமிகளுடன் நங்கூர மிட்டிருந்த ‘யாரா ஜே’ என்ற ரசாயன கப்பல் மீதும் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல் கள் நடத்தப்பட்டன.
இந்த விபத்துகள் குறித்து ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வெளியிட்டுள்ள பதி வில், ‘அதிர்ஷ்டவசமாக இரண்டு கப்பல்களிலும் இருந்த 24 இந்திய மாலுமிகளும் எவ்வித காயங்களுமின்றி முழுப் பாதுகாப்போடு உள்ள னர்’ என்று தெரிவித் துள்ளார். இதற் கிடையே வர்த்தகக் கப்பல்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீதான இத்தகைய சட்டவிரோதத் தாக்கு தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், மாலுமிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா கண்டனம் பதிவு செய்துள்ளது.
