சென்னை 23, அக்டோபர் 2026: ஸ்பாடிஃபை நிறுவ னம் தமிழ்நாட்டில் தனது புதிய விளம் பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டிற்கே உரித்தான தனித்துவ மான ரசிகர் கலாச்சா ரத்தைக் கொண்டாடும் வகையில் இரண்டு புதிய காணொளிகளை உள்ளடக்கியுள்ளது. ஸ்பாடிஃபையின் “ தளபதி விஜய் ” மற்றும் “சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்” ஆகியோருக் கான பிரத்யேக ‘ஸ்டார் பிளேலிஸ்ட்களை’ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள், தங்களுக்குப் பிடித்த மான பாடல்கள் ஒருவரை எப்படி உண்மையான ரசிகராக மாற்றுகின்றன என்ப தையும், அன்றாடச் சூழல்களைக் கூட தங் களுக்குப் பிடித்த நட்சத்திரங்களால் ஈர்க்கப்பட்ட தருணங் களாக எப்படி மாற்று கின்றன என்பதையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டு கின்றன. “வெறித்தன மான ரசிகர்களுக்கு, வெறித்தனமான பிளேலிஸ்ட்கள் – ஸ்பாடிஃபையில் மட்டுமே!” என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக் கப்படுகிறது.
இந்த இரண்டு விளம்பரப் படங்களும், நமக்கு நன்கு தெரிந்த சூழல்கள் மூலமாக இந்த எண்ணத்தை உயிர்ப்பிக்கின்றன. இவை ரசிகர்களின் தனித்துவமான தருணங் களைச் சித்தரிக் கின்றன; ஒரு காட்சி யில், ரசிகர் ஒருவர் ‘தளபதி’ விஜய்யின் பாணியில், புறப்பட்டுச் செல்லும் பேருந்தைப் பின் தொடர்ந்தபடி ‘வாத்தி ரெய்டு’ பாடலை ஒலிக்கச் செய்கிறார். Ñற்றொரு காட்சியில், கணவர் ஒருவர் ‘படையப்பா’ திரைப் படத்தின் பின்னணி இசையை ஒலிக்கச் செய்து, ரஜினி காந்தின் பாணியில் ஒரு குடும்ப நிகழ்விற்குள் நுழைகிறார். இசை எவ்வாறு ரசிகர்களைத் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பாத் திரத்தில் தங்களை உண ரும் படி தூண்டுகிறது என்பதை இந்த இரண்டு காட்சிகளும் காட்டு கின்றன.
ஸ்பாடிஃபை இந்தி யாவின் சந்தைப்படுத் தல் பிரிவுத் தலைவரான சிப்ரா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இந்தியா வின் கலாச்சாரச் சூழலில் தமிழ் இசைக்கு மிக முக்கியமான இடமுண்டு; நாட்டில் ஒலிக்கப்படும் பாடல் களில் ஏறக்குறைய பத்தில் ஒன்று தமிழ் பாடல்களாகவே உள்ளன. இது, தமிழ் இசைக்கும் அதன் ரசிகர் களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை யும், தலைமுறைகளைக் கடந்து புவியியல் எல்லைகளையும் தாண்டிச் செல்லும் அதன் ஆற்றலையும் காட்டுகிறது.
இந்த முன்னெடுப் பின் மூலம், தமிழ் நாட்டின் கலாச்சார அடையாளத்தில் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழும் இசையையும், அந்த இசையின் மீதான ரசிகர்களின் ஈடுபாட் டையும் நாங்கள் கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்தார்.
