சென்னை – 2 நவம்பர், 2026 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
————————————————————-
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இன்று (01.11.2026), உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள்களாக, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.10.2026 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் -பல்லுயிர் மேலாண்மைக்குழு குறித்தும், இழிவு தரும் சாதிப்பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு(2026), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராம சபா கூட்டப்பொருள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நட்டாத்தி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். உள்ளாட்சி தினம் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான தினமாகும். ஏனென்றால் கடைக்கோடி மக்களும் தங்களுடைய கிராமத்தில் தேவைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் கிராம சபை கூட்டமாகும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற கிராம சபைகளில் கண்டிப்பாக பங்கேற்று தங்களின் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் அவ்வாறு விவாதிக்கும் பொழுது உங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்ய முடியும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை உயர்கல்வி வரை படிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்திட வேண்டும். இடை நீற்றல் குழந்தைகள் இருந்தால் தக்க அறிவுரை வழங்கி பள்ளியில் சேர்த்திட வழிமுறை செய்திட வேண்டும். தற்போது பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதர துறைகள் மூலம் 100 க்கு மேற்பட்ட மாணவர்களே பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தங்கள் குழந்தைகளை செல்போன் பயன்பாட்டை தவிர்த்து நூலகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை படிக்க வழிகாட்டுங்கள்.
தொடர்ந்து டெங்கு போன்ற காய்ச்சல்களை வருவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் பழைய டயர் தேங்காய் சிரட்டை, தண்ணீர் தொட்டி திறந்து வைத்தல் ஆகியவற்றினை தவிர்த்து பாதுகாத்திட வேண்டும். சுகாதாரத் துறை வழிகாட்டுதலால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், 14 வயதிற்கு மேற்பட்ட தங்கள் குழந்தைகளை HPV தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திட வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக தொழில்கள் செய்து வருகிறார்கள். மேலும் அவர்களின் தொழில்களை மேம்படுத்தும் வகையில் 400 மகளிர் சுய உதவி குழுக்கள் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்படவுள்ளது.
மக்களின் கோரிக்கைகளை தீர்வு காண்பதில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. 24 மணி நேரமும் உங்களின் கோரிக்கைகளை தீர்வு காண்பது எங்களின் கடமை. மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் எடுத்து கூறினீர்கள். குறிப்பாக பட்டா அரசு விதிமுறைகளுக்கேற்ப பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியாய விலைக் கடைக்கான கட்டடம் தேவைகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஆலோசிக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்றும் இதர பொதுவான கோரிக்கைகளை அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியான மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை கௌரவப்படுத்தியும் 2026-27 நிதியாண்டில் முழுமையாக வரி செலுத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.20 இலட்சம் மதிப்பில் வங்கிக் கடன் உதவியும், வேளாண்மை துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு தூயமல்லி நெல் விதை, உயிர் உரங்களும் , தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனளிகளுக்கு தென்னங்கன்றுகள், பழசெடி தொகுப்பு என 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் செயற் பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை திரு.இளஞ்சேரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கௌதம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, துணை இயக்குநர் வேளான் திரு.பூவரகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சின்னத்துரை, திருமதி சரஸ்வதி, ஊராட்சி செயலாளர் திரு.முத்துராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.
