hello madras mobile banner 1200x300

விமானப்படைத் தளபதியாக அஷுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

சென்னை – 2 நவம்பர், 2026 இந்திய விமானப்படையின் 29-வது தலைமைத் தளபதியாக, ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று (01 நவம்பர் 2026) பொறுப்பேற்றார். தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தித் தமது பதவிக்காலத்தை அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, புது தில்லி விமானப்படைத் தளத்தில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

ஏர் சீஃப் மார்ஷல் தீட்சித், 3,500 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயண அனுபவம் கொண்டவர். முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவருக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர், மத்திய விமானப் படைத் தளத்தின் தலைமைத் தளபதி, விமானப் படைத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

பொறுப்பேற்ற பின் அவர் தமது தொடக்க உரையில், இந்திய விமானப்படைக்கான தமது தொலைநோக்குப் பார்வையையும் முன்னுரிமைகளையும் எடுத்துரைத்தார்.

Read the full e-paper

Translate »