hello madras mobile banner 1200x300

டாக்டர் அம்பேத்கார் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கோவை – டாக்டர் அம்பேத்கார் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்டம் சார்பில்  கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி போத்தனூர் ரயில் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், குறிச்சி பிரபாகரன்,  பகுதி பொறுப்பாளர் காதர், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சண்முகம் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர்  எம். ஆர்.ஆர். பிரகாஷ் , மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் , பேரூர் கழக பொறுப்பாளர்கள் , மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »