hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஜெய்பீம் பேரணி..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஜெய்பீம் பேரணி சோழவந்தான்சட்டமன்ற தொகுதி செயலாளர் சிந்தனைவளவன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் முன்னிலையில் நடைபெற்றது. அலங்காநல்லூரில் இருந்து பேரணியாக துவங்கி அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி  வரை சென்று பெரிய ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்கள்  டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி, டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் நல்லகுமார்,  கலைவாணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியில் இருந்து திருப்பதி என்பவர் மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »