சென்னை 25, அக்டோபர் 2026: சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர் நேஷனல் சர்க்யூட் டில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2026 இந்தியன் ரேசிங் திரு விழாவின் ஒரு பகுதி யாக நடைபெற்ற எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 3-வது சுற்றில் விறுவிறுப்பான பந்தயங்கள், வியக்கத் தக்க திருப்புமுனைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை களும் அரங்கேறின. கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் லுவிவே சம்புட்லா இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற தோடு, மற்றொரு போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து இந்த வார இறுதியில் மிகச் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் – ன் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெற்றார். அதே வேளையில், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியைச் சேர்ந்த 15 வயதான ஆரோன் மேத்தா, சாம்பியன்ஷிப் வரலாற் றில் மிகக் குறைந்த வயதில் பந்தயத்தை வென்று ஒரு வர ல £ற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
சம்புட்லா 5புள்ளிகள் பின்தங்கி யிருந்த நிலையில், அதனை 21-புள்ளிகள் முன்னிலையாக மாற்றி, 138 புள்ளிகளுடன் கிச்சாஸ் கிங்ஸ் பெங்க ளூரு அணியின் ஆரிஸ் கிரியாகோவை (117 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார். 3.717 கிலோமீட்டர் சுற்றள வில், சம்புட்லா தனது அசாத்திய வேகத்தை யும் பந்தயத் திறனையும் வெளிப்படுத்தி, முதல் இரண்டு பந்தயங்களில் ஆறாவது இடத்தி லிருந்து தொடங்கி வெற்றியைப் பதிவு செய்தார். ஸ்பீட் டீமென்ஸ் டெல்லி அணியின் என்டிசோ மபுண்டா மூன்று பந்த யங்களிலும் இரண்டா வது இடத்தைப் பிடித்து அசத்தினார். இறுதிப் பந்தயத்தில் கடும் அழுத்தமும், போட்டியும் இருந்த போதிலும், முதல் வெற்றியை பதிவுசெய்து தனது திறனை மேத்தா நிரூபித்தார். எட்டு உரிமையாளர் அணி களைப் பிரதிநிதித் துவப்படுத்தும் 16 ரேஸ் ஓ ட் டு ந ர் க ள் சென்னையில் களமிறங் கியபோது, கிரியா கோவ் புள்ளிப் பட்டி யலில் முன்னிலையில் இருந்தார். இருப்பினும், சவாலான ஈரப்பதமான வானிலை மற்றும் கடுமையான போட்டி கள் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான யுத்த சூழலை விரைவாக மாற்றியமைத்தன.
முதல் பந்தயத்தின் தொடக்கத்தில் முன்னிலை பெற்ற கிரியாகோவ் – க்கு இணையாக மேத்தாவும் பயணித்தார்; சம்புட்லா முதல் லேப் – ல் இரண்டு இடங்கள் முன்னேறினார். ஈரப்பத மான தரைப்பரப்பு ரேஸ் ஓட்டுநர்களுக்கு சவாலாக இருந்த நிலையில், சம்புட்லா மேத்தாவைக் கடந்து, இரண்டாவது இடத் திற்கு முன்னேறினார் பின்னர் 9-வது சுற்றில் கிரியாகோவ் தனது காரின் பின்புறப் பிடியை இழந்ததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய மேத்தா முன்னிலை பெற்றார்.
ஸ்பீட் டீமென்ஸ் டெல்லிக்காக பத்தா வது இடத்திலிருந்து தொடங்கிய என்டிசோ மபுண்டா, மேத்தா மற்றும் கிரியாகோவை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி னார். அதே வேளையில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் ஆர்யன் நரோலாவும் முன்னணி இடங்களுக் கான போட்டியில் இணைந்தார்.
