hello madras mobile banner 1200x300

2.2 ஜிகாவாட் சூரிய மின்கல ஆலையை அமைக்க நவிதாஸ் திட்டம்

சென்னை 25, அக்டோபர் 2026: இந்தியாவின் முன் னணி ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரி சக்தி நிறுவனங்களில் ஒன்றான நவிதாஸ், தனது சூரிய மின்கல உற்பத்தித் திட்டங் களை விரிவுபடுத்து வதற்காக, சுவிட்சர் லாந்தைச் சேர்ந்த தாக்க முதலீட்டு மேலாண்மை நிறுவன மான ரெஸ்பான்ஸ் அபிலிட்டியிட மிருந்து அதன் முதலீட்டாளர்கள் சார்பில் 2 கோடி அமெரிக்க டாலர் வரையிலான வளர்ச்சி நிதியைப் பெற்றுள் ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா வில் 2.2 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்கல உற்பத்தி ஆலையை அமைக்க நவிதாஸ் திட்டமிட் டுள்ளது.

இந்த முதலீடு, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளில் கார்பன் டை ஆக்சைடு வெளி யேற்றத்தைக் கணிச மாகக் குறைப்பதுடன், சமூகத்திற்கும் நன்மை பயக்கும் வகையிலான தனியார் துறைத் திட்டங்களுக்கு ஆதர வளிக்கும் ரெஸ்பான்ஸ் அ பிலிட்டியின் ஆசியப் பருவநிலை நிதியி லிருந்து மேற்கொள்ளப் படுகிறது.

சூரிய மின்தகடுகள், அவற்றில் பயன்படுத்தப் படும் உறையிடும் பொருட்கள் உற்பத்தி, பொறியியல், கொள் முதல் மற்றும் கட்டு மானச் சேவைகள் (இபிசி), மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (பிஇஎஸ் எஸ்), புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி எனப் பல்வேறு துறைகளில் நவிதாஸ் செயல்பட்டு வருகிறது.

சூரிய மின்கல உற்பத்தியில் நுழை வதன் மூலம், உற்பத்திச் சங்கிலியின் முந்தைய கட்டங்களி லும் தனது செயல்பாடு களை விரிவுபடுத்தி, இறக்கு மதியைச் சார்ந்திருப் பதைக் குறைக்க வும், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிக்க வும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனுடன், சூரிய மின்கலங்களுக் கான சிலிக்கான் தகடு கள் ( Wafer ) மற்றும் சிலிக்கான் கட்டிகள் ( Ingot ) உற்பத்தியிலும் விரைவில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு குறித்துப் பேசிய நவிதாஸ் நிறுவனத்தின் இயக்குநர் வினீத் மிட்டல், இந்தக் கூட் டாண்மை உள்நாட்டு விநியோகச் சங்கிலி களை வலுப்படுத்து வதுடன், உயர் செயல் திறன் கொண்ட TOP Con மற்றும் பெரோவ் ஸ்கைட்- TOPCon கலப்புத் தொழில்நுட்ப மின்தகடுகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் என்றார்.

நவிதாஸ் சோலார் நிறுவனத்தின் செயல் பாட்டுத் தலைவர் விஜய் மேனன், பொறுப் பான வளர்ச்சி, வலு வான நிர்வாகம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வேலைவாய்ப்பு நடை முறைகள் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு முக்கியமானவை என்றார்.

நிதித் துறைத் தலைவர் கார்த்திக் ஜெயின், இந்த நிதி நிறுவனத்தின் நிதிச் செயல்திறனை வலுப் படுத்தி, செயல்பாடு களை விரிவுபடுத்தவும், இந்தியாவின் தூய்மை யான எரிசக்தி மாற்றத் திற்குப் பங்களிக்கவும் உதவும் என்றார்.

ரெஸ்பான்ஸ்அபிலி ட்டியின் பருவநிலை உள்கட்டமைப்பு முதலீட்டுப் பிரிவின் முதன்மை அதிகாரி ஜெய் பாத்திஜா, சூரிய மின்கல உற்பத்தியில் நவிதாஸ் விரிவாக்கம் செய்வது, உற்பத்திச் சங்கிலியை மேலும் ஒருங்கிணைத்து நிறுவ னத்தின் நீண்டகாலப் போட்டித்திறனை அதிகரிக்கும் இயல் பான அடுத்தகட்ட நடவடிக்கை என்றார். இந்த முதலீட்டுப் பரிவர்த்தனையில், மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் கேப்பிட்டல் நிறுவனத்தின் உள்கட் டமைப்பு ஆலோசனை பிரிவு, நவிதாஸின் பிரத் யேக நிதி ஆலோசக ராகச் செயல்பட்டது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »