hello madras mobile banner 1200x300

கோயம்பேடு பகுதியில் பெண்ணை அவதூறான வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்த நபர் கைது.

சென்னை – 7 நவம்பர், 2026 சென்னை, நெற்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 48 வயது பெண் ஒருவர் அவரது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருவதாகவும், இவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் சீனிவாசன் (எ) சீனு என்பவர், கடந்த இரண்டு வருடங்களாக அப்பெண் அவரது வீட்டின் அருகே நடந்து செல்லும் போது அவதூறான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார், இந்நிலையில் அப்பெண் கடந்த 04.11.2026 அன்று மதியம் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த சீனிவாசன் அப்பெண்ணை பார்த்து அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார், அப்பெண் சீனிவாசனிடம் ”ஏன் என்னை அடிக்கடி அவதூறான வார்த்தைகளால் பேசுகிறீர்கள்”, என்று கேட்டதற்கு, அப்படிதான் பேசுவேன் எனக் கூறியுள்ளார். தன்னை அவதூறாக பேசி, அருவருக்கதக்க வகையில் நடந்து கொண்ட சீனிவாசன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி சீனிவாசன் (எ) சீனு, வ/51, லட்சுமணன் தெரு, புவனேஸ்வரி நகர், நெற்குன்றம், சென்னை என்பவரை நேற்று (05.11.2026) அன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி சீனிவாசன் (எ) சீனு என்பவர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (05.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read the full e-paper

Translate »