hello madras mobile banner 1200x300

எலக்ட்ரிக் சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்கப் உரிமையைப் எளிதாக்கக் கூட்டு சேர்ந்துள்ள Tata Motors மற்றும் Turno

சென்னை – 13 நவம்பர், 2026: இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான Tata Motors, தனது எலக்ட்ரிக் சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்கப் (e-SCVPU) வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக நிதியுதவித் திட்டங்களை வழங்குவதற்காக, இந்தியாவின் முதல் பேட்டரி பேட்டரி நுண்ணறிவு மற்றும் ஆயுள் மேலாண்மை நிறுவனமான Finzo EV Solutions Pvt. Ltd. (Turno) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் கீழ், Tata Motors வாடிக்கையாளர்களுக்கு விரைவான கடன் வழங்கல், நெகிழ்வான திருப்பிச்செலுத்தும் திட்டங்கள் மற்றும் 25% உத்தரவாதமளிக்கப்பட்ட திரும்பப் பெறும் வசதி (buyback guarantee) ஆகியவை கிடைக்கும்.

இந்த நிகழ்வில் பேசிய டர்னோவின் இயக்குநர் வருண் நாயர் அவர்கள், "Turno-வில், EV வாங்கும் பயணத்தை எளிமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் இந்தியா முழுவதும் பசுமையான, பூஜ்ஜிய உமிழ்வு (zero-emission) மொபிலிட்டியைக் கொண்டுவருவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எலக்ட்ரிக் வணிக மொபிலிட்டி வேகம் பெற்று வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகனத்தின் வாழ்நாள் மதிப்பைப் பற்றிய தெளிவும் உத்தரவாதமும் தேவைப்படுகிறது. Tata Motors உடனான எங்கள் கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற நிதியுதவி மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட திரும்பப் பெறும் ஆதரவை ஒன்றிணைத்து, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு எலக்ட்ரிக் மொபிலிட்டிக்கு மாறுவதை எளிதாக்குகிறது. பேட்டரி இன்டெலிஜென்ஸ் மற்றும் EV லைஃப்சைக்கிள் மேனேஜ்மென்ட்டில் உள்ள எங்கள் நிபுணத்துவம் மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட திரும்பப் பெறும் திட்டத்தைப் பயன்படுத்தி, எலக்ட்ரிக் வணிக வாகனங்களின் பயன்பாடு மற்றும் மறுவிற்பனைப் பயணத்தில் அதிக நம்பிக்கையை உருவாக்குகிறோம்" என்று கூறினார்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் லிமிடெட்டின் துணைத் தலைவர் மற்றும் SCVPU வணிகப் பிரிவுத் தலைவர் பினாகி ஹல்தார் அவர்கள், "தூய்மையான மொபிலிட்டியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதிலும், இந்தியாவின் நிலையான லாஸ்ட்-மைல் லாஜிஸ்டிக்ஸ் மாற்றத்தை விரைவுபடுத்துவதிலும் Tata Motors உறுதியுடன் உள்ளது. எங்கள் e-SCVPU வரம்பு சிறந்த செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் இயக்கச் செலவுச் சேமிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வாகன உரிமை எளிதாகவும், கணிக்கக்கூடியதாகவும், கவலையற்றதாகவும் மாறும் போதுதான் அதன் பயன்பாடு உண்மையாக அதிகரிக்கும். Turno உடனான எங்கள் கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் நமது EV அமைப்பை வலுப்படுத்துகிறது. நிதி தடைகளை நீக்கி, நீண்டகால மறுவிற்பனை மதிப்பைப் பாதுகாப்பதன் மூலம், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பூஜ்ஜிய உமிழ்வு மொபிலிட்டிக்கு மாற நாங்கள் வழிவகுக்கிறோம்" என்று கூறினார்.

பல்வேறு சரக்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் Ace Pro EV, Ace EV 1000 மற்றும் Intra EV Pickup உட்பட பலதரப்பட்ட லோட் டெக் அமைப்புகள் மற்றும் பேலோட் தேர்வுகளில் கிடைக்கும் மிகப்பரந்த e-SCVPU மாடல்களுடன் Tata Motors இந்தியாவின் எலக்ட்ரிக் வணிக வாகன மாற்றத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்த வாகனங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் 25,000-க்கும் அதிகமான பொது சார்ஜர்கள், அதிக இயங்குநேரத்திற்காக (uptime) நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பிரத்யேக EV ஆதரவு மையங்கள், சம்பூர்ண சேவா 2.0-வின் கீழ் விரிவான ஆயுட்காலப் பராமரிப்பு, Tata Motors-ன் இணைக்கப்பட்ட வாகன தளமான ஆன ஃபிலீட் எட்ஜ் மூலமாக ஃபிலீட் மேனேஜ்மென்ட், மற்றும் முன்னனி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் மொபிலிட்டி நிதியாளர்களுடனான மூலோபாய கூட்டாண்மைகள் உள்ளிட்ட முழுமையான ஆதரவு அமைப்பு உறுதுணையாக உள்ளது.

Read the full e-paper

Translate »