சென்னை – 12 நவம்பர், 2026 டிசம்பர் 2026-க்கான அஞ்சலக ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குறைதீர்ப்பு முகாம் டிசம்பர் 4-ம் தேதி காலை 11.30 மணிக்கு தலைமை அஞ்சல் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரில் நடைபெறவுள்ளது.
ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்குத் தீர்வு காண ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களைத் தபால் அல்லது bgt.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான குறைகள் குறித்த விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 13, மாலை 5.45 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்கும் ஓய்வூதியதாரர்கள் தங்களது செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களை மனுவில் முறையாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
