சென்னை 28, அக்டோபர் 2026: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப் போவதில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித் துள்ளார். வெளிச்சந்தை யில் ஒரு யூனிட் மின்சா ரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. டிசம்பர் முதல் 2027 மே வரை 2,100 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ரூ.41.50க்கு வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப் பட்டது. வெளிச்சந்தை யில் டிசம்பரில் 361 மெகாவாட் மின்சாரத் ¬ த யூனிட் ரூ.41.50 என்ற விலையில் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ரூ.37 முதல் ரூ.41 வரையி லான விலையில் மின்சா ரத்தை கொள்முதல் செய்யப் போவதில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித் துள்ளார். இன்று டெண்டர் திறக்கப் பட்ட நிலையில், பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட் டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குத் தேவை யான மின்சாரத்தைச் சமாளிக்க போதுமான மின்சாரம் நம்மிடம் உள்ளது. அடுத்த கோடைக்காலத் தேவைக்காக முன் கூட்டியே மின்சாரத் தைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப் பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் குறிப்பிட் டுள்ள இந்த விலைகள் நியாயமற்றவை.
இதற்கிடையே, அடுத்த 20 ஆண்டு களுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, இனி அதிக விலை கொடுத்து எரி வாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சா ரத்தைக் கொள்முதல் செய்யப் போவதில்லை. கீழே குறிப்பிடப்பட் டுள்ள டெண்டரை ரத்து செய்யவும் ஏற் கெனவே உத்தரவிட் டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
