hello madras mobile banner 1200x300

மாம்பலம் பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் மூதாட்டி மற்றும்அவரது மகளிடம், பணம் கேட்டு, வீண்தகராறு செய்து, கத்தியைகாட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, தி.நகர் பகுதியில் மகாலட்சுமி, பெ/வ.44, க/பெ.மார்செல் என்பவர்
அவரது குடும்பத்தினருடன் வசித்து வருவதாகவும், அவரது தாயார் தாட்சாயிணி,
பெ/வ.67 என்பவர் தி.நகர், காமராஜர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் அருகே பூ
மற்றும் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், அப்பகுதியைச்
சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் அடிக்கடி பூக்கடைக்கு வந்து பணம் கேட்டு, தகராறு
செய்து வந்த நிலையில், கடந்த 10.09.2026 அன்று மாலை, தாட்சாயினி மற்றும்
அவரது மகள் மகாலட்சுமி ஆகிய இருவரும் பூக்கடையில் இருந்தபோது, அங்கு வந்த
சதீஷ்குமார் மீண்டும் பணம் கேட்டு, தகராறு செய்து, மகாலட்சுமி மற்றும் அவரது
தாயார் இருவரையும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி, கத்தியைக் காட்டி, கொலை
மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், மேற்படி சம்பவம் குறித்து
மகாலட்சுமி, R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், பாரதிய
நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை
தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து
போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி சதீஷ்குமார்,
வ/34, காமராஜர் காலனி, தி.நகர், சென்னை என்பவரை நேற்று (11.09.2026) கைது
செய்தனர். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல்
செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி சதீஷ்குமார் என்பவர் R-1 மாம்பலம் காவல் நிலைய
சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 5 கொலைமுயற்சி,
வழிப்பறி, அடிதடி உட்பட மொத்தம் 17 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி சதீஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(11.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »