சென்னை 27, அக்டோபர் 2026: வடகிழக்கு மாநிலங் கள் மற்றும் மியான் மர் எல்லைப் பகுதி களில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் குறிவைத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), மத்திய மற்றும் மாநில அரசு அமைப்பு களுடன் இணைந்து, 2026 அக்டோபர் 23ஆம் தேதி அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 38 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகளை நடத் தியது. ‘ஆபரேஷன் டிரைடன்ட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை யி லும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழி காட்டுதலிலும் நடை பெற்ற இந்த நடவடிக் கை, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு களைத் தகர்ப்பது, கடத்தல் வழித்தடங் களை முடக்குவது மற்றும் சட்டவிரோத வர்த்தகத்துக்குத் துணைபுரியும் நிதிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
ஐஸ்வால், சம்பாய், சோகாவ்தார், சுராசந்த் பூர், கச்சார் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 18 பேர் கைது செய் யப்பட்டனர். மேலும், 500 வெடிப்பான்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டன. 1,424 வங்கிக் கணக்குகளும் முடக்கப் பட்டன. விசாரணை யில், ரூ.100 கோடி மதிப்பி லான ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்ட துடன், ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்து களும் பறிமுதல் செய் யப்பட்டன. மியான் மரின் சகாயிங் பகுதி வழி யாகப் பயன் படுத்தப் பட்டதாகக் கூறப்படும் கடத்தல் வழித்தடங்களும் முடக்கப்பட்டன.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் 2026- 2029 தொலைநோக்கு ஆவணத்தின் அடிப் படையில், உளவுத் தகவல் பகிர்வு, ஒருங் கிணைந்த நடவடிக்கை கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை விசா ரணைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
2029 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு களை வேரறுக்க அமித் ஷா இலக்கு நிர்ண யித்துள்ளார். போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக் குதல், இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் னுல்லை களைப் பலப்படுத்துதல் ஆகிய அரசின் நோக்கங் களை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாக ‘ஆபரேஷன் டிரை டன்ட்’ அமைந்துள்ளது.
