சென்னை 27, அக்டோபர் 2026: தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என நாள்தோன்றும் ஏராள மான குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீப நாட்களாக சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொது மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
மாற்றம், மாற்றம் என்று கூவி ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியில், குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதே முக்கிய மாற்றமாக இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அ வர் கூறியிருப்ப தாவது;
அமைதிப்பூங்கா வாக இருந்த தமிழ் நாட்டில் மே 4-க்குப் பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக் கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன் றைய கொலைப்பட்டி யல் என்று தனி காலம் போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.
சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாய மான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக் கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல் லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய் துள்ளனர். த.வெ.க. வினரும் தங்களது க்ரைம் கோட்டா-வை விட்டுக்கொடுப்பதில் லை என்பதற்கு சாட்சி யாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ள தாக கைது செய்யப்பட் டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையா வது நடத்துவாரா என கேள்வி எழுப்பியுள்ளர். ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் கொலைகள் இன்னும் தொடர்வது ஏன்? டம்மி முதலமைச் சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
