சென்னை 27, அக்டோபர் 2026: மூளையில் ஏற்பட்ட சிக்கலான இரத்தக் கசிவால் இதயத் துடிப்பு தடைப்பட்டு அதற்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகும் குணமாக முடியாமல் உயிருக்கு போராடிய முப்பத்தி இரண்டு வயது பெண் ணிற்கு பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிந்து அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளது காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடு. சிகிச்சைக்குப் பிறகு இதய செயல்பாடுகள் சரியானதோடு நோயா ளிக்கு மூளையில் இருந்த இரத்த நாளப் பிரச்சனையும் சரியானது.
நோயாளி ஒரு சிறிய சிகிச்சைக்காக வேறொரு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவரது இதய துடிப்பு திடீரென நின்றது. உடனேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டது. ஆனாலும் நோயாளி தொடர்ந்து நினைவில்லாமலேயே இருந்தார்; மேலும் அ வரது இதயச் செயல் பாட்டிலும் முன்னேற் றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். இங்கு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், அவருக்கு மூளையில் இருந்த சிக்கலான இரத்த நாளக் குறை பாடுகளால் கடுமை யான இரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப் பட்டது. இதுவே அவரது இதயத் துடிப்பு தடை படவும், சிகிச்சைக்குப் பிறகும் இதய செயல்பாடு சீராகாமல் இருப்ப தற்கும் காரணமாக அமைந்தது.
நோய்க்கான மூலக்காரணம் தெரிந்த பின் பெண்ணிற்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் அவர்களின் தலைமை யில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையின் போது, மூளையில் இருந்த இரத்தநாளப் புடைப்பு சரிசெய்யப் பட்டு, முக்கிய நரம்பு பாதையும் சரி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை யைத் தொடர்ந்து, நோயாளி நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை நரம்பியல் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பொன்னையா வனமூர்த்தி தலைமை யிலான குழுவினர் தொடர்ந்து கண்கா ணித்தனர். இதைத் தொடர்ந்து இதயச் செயல்பாடு உட்பட அனைத்து மருத்துவப் பரிசோதனை அளவீடு களிலும் நோயாளிக்கு படிப்படியான முன் னேற்றம் ஏற்பட்டது. இரண்டு மாத மருத்துவ மனை சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் குறிப் பிடத்தக்க அளவில் குணமடைந்து, இன்று தினசரிப் பணிகளைத் தாமாகவே செய்யும் அளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பி யுள்ளார்.
இச்சிகிச்சை குறித்து பேசிய காவேரி மருத் துவமனை ரேடியல் ரோடின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் கூறுகையில், “மூளை யைப் பாதிக்கும் பக்க வாதம் ஏற்பட்டிருப் பதை கண்டறிந்ததும், நாங்கள் அளித்த ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை நோயாளி வெற்றிகரமாகக் குண மடைய உதவியுள்ளது. மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற தீவிரமான நரம்பியல் பிரச்சினை கள், சில சமயங்களில் இதயத்தின் செயல்பாட் டையும் பாதித்து, இதயத் துடிப்பை நிறுத் தலாம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், இதன் பின்னணியில் உள்ள மூலக்காரணம் இதயப் பிரச்சினை அல்ல, நரம்பியல் பிரச்சினை தான் என்பதைச் சரியாகக் கண்டறிவது மிக முக்கியம். சரியான நேரத்தில் செய்யப்படும் துல்லியமானக் கண்டறி தல் மட்டுமே உரிய சிகிச்சையைத் தாமத மின்றி வழங்க உதவும்,” என்றார்.
