hello madras mobile banner 1200x300

ஓட்டேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்ட 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது.

சென்னை, புரசைவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்
அப்பன்ராஜ், வ/24 என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த
02.09.2026 அன்று இரவு, ஓட்டேரி, வெங்கடம்மாள் சமாதி வழியாக அவரது
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த தெரிந்த
நபர்களான பிரவீன், சஞ்சய் மற்றும் பரத் ஆகியோர் அப்பன்ராஜின் இருசக்கர
வாகனத்தை வழிமறித்து, ‘எதற்காக மாதா கோவில் ஊர்வலத்துல எங்ககிட்ட
பிரச்சனை செய்தாய்?‘ எனக்கூறி தகாத வார்ததைகளால் பேசி, அவர்கள் மறைத்து
வைத்திருந்த ஒரு கத்தியால் அப்பன்ராஜை தாக்கியபோது, அப்பன்ராஜ் சத்தம்
போடவே, சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதை கண்ட 3 நபர்களும், கொலை
மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாகவும், தாக்குதலில் இரத்தக்காயமடைந்த
அப்பன்ராஜ் KMC அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று
வரும் நிலையில், மேற்படி சம்பவம் குறித்து அப்பன்ராஜ் கொடுத்த புகார் மீது, P-2
ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு
செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
P-2 ஓட்டேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில்
ஈடுபட்ட எதிரிகள் 1.பிரவீன்குமார் (எ) பேனா, வ/22, சாலைமா நகர், பிரிக்ளின்
ரோடு, புரசைவாக்கம், சென்னை 2.பரத், வ/22, வாசுதேவன் தெரு, புரசைவாக்கம்,
3.சஞ்சய், வ/20, திரு.வி.க. தெரு, ஓட்டேரி ஆகிய 3 நபர்களை நேற்று (03.09.2026)
கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஒரு கத்தி
பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும் G-1 வேப்பேரி காவல் நிலைய
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், பிரவீன்குமார் மற்றும் பரத் மீது தலா
10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 5 குற்ற வழக்குகளும் உள்ளது
தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (03.09.2026)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »