சென்னை – 13 நவம்பர், 2026 ‘ எல்லைகளற்ற கதைகள்’ என்ற கருப்பொருளின் கீழ், 57- வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ), 2026 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள், படைப்பாற்றல் மிக்க கலைஞர்களை ஒன்றிணைக்கும்.
இந்த விழாவின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் செய்தியாளர் சந்திப்பு, நவம்பர் 13 அன்று, கோவாவில் நடைபெறவுள்ளது. மாநில முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா பொழுதுபோக்கு சங்கத்தின் துணைத் தலைவர் டெலைலா லோபோ, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சல் குமார், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஜி. கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் தீரஜ் சிங், ஐஎஃப்எஃப்ஐ 2026- ன் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
