hello madras mobile banner 1200x300

மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதுடன் போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

சென்னை – 12 நவம்பர், 2026 மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதுடன் போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் வ உ சிதம்பரம் கல்லூரியின் 75-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கல்லூரியும், ஆசிரியர்களும், தாம் சந்தித்த ஆளுமைகளும் மிகப் பெரிய பொறுப்புக்கான திறனை தாம் வளர்த்து கொள்வதற்கு உதவியதாக அவர் தெரிவித்தார்.

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தை நினைவுகூர்ந்த அவர், அதற்கு எதிரான போராட்டத்தில் தாம் பங்கேற்றதைக் குறிப்பிட்டார். நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திய அவர், ஒருங்கிணைந்த நாடாக இந்தியாவின் வலிமை தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் மொழி, கலாச்சார அடையாளத்தை பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் தாய்மொழி குறித்து பெருமிதம் கொள்வதுடன் தேசிய உணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதுடன் தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும் உத்வேகம் அளித்தார்.

நாட்டைக் கட்டமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் இருந்த சுதந்திர போராட்ட வீர்ர் வ உ சிதம்பரம் பிள்ளையின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், இந்தக் கல்லூரியின் 75 ஆண்டுகால நிறைவை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவை அவர் திறந்து வைத்தார். 1975 முதல் 1978 வரை இந்தக் கல்லூரியில் பயின்றதை நினைவுகூர்ந்த அவர், தாம் பயின்ற வகுப்பறைக்குச் சென்று சக தோழர்களுடன் கலந்துரையாடினார்.

Read the full e-paper

Translate »