hello madras mobile banner 1200x300

நாடு தழுவிய கடலோர பாதுகாப்பு பயிற்சியான ‘சி விஜில்-26’ நவம்பர் 11 முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை – 12 நவம்பர், 2026 இந்திய கடற்படையின் ஒருங்கிணைப்புடன் நாடு தழுவிய 5-வது கடலோர பாதுகாப்பு பயிற்சியான 'சி விஜில்-26' நவம்பர் 11 முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக 2026 நவம்பர் 12 முதல் 17-ம் தேதி வரை கடலோர பாதுகாப்பு, தயார்நிலை மதிப்பீடு நடைபெறும். அதன்பிறகு நவம்பர் 18, 19-ம் தேதிகளில் கடல் சார்ந்த பயிற்சி கட்டம் நடைபெறும்.

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் வகையில் 2018-ம் ஆண்டு சி விஜில் பயிற்சி ஏற்படுத்தப்பட்டது. சி விஜில்-26 பயிற்சியில் இந்தியாவின் அனைத்து கடற்கரை பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மேற்கொள்ளப்படும்.

இதில் அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மீனவ சமூகத்தினர் உள்ளிட்ட கடல்சார் தொடர்புடைய அனைவரும் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு காவல்துறை, சுங்கத்துறை, இதர கடல்சார் அமைப்புகளின் வளங்கள் பயன்படுத்தப்படும். அத்துடன், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆகியவற்றுடன் மத்திய அரசின் இதர அமைப்புகள், கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் இப்பயிற்சியை நடத்த ஒத்துழைக்கின்றன.

Read the full e-paper

Translate »