hello madras mobile banner 1200x300

சுகாதாரப் பணியாளர்களின் தற்காலிக பதிவுக்கான விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது

சென்னை – 12 நவம்பர், 2026 இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய இணை மற்றும் சுகாதாரப் பணி ஆணையம் தகுதியுடைய இணை, சுகாதாரப் பணியாளர்களின் தற்காலிக பதிவுக்கான விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது. இதில் திறன் மேம்பாடு, தகுதி மதிப்பீடு, வழக்கமான பதிவிற்கு மாறுதல் ஆகியவை தொடர்பாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு பணியாளர்களின் பதிவில் சிறந்த சீரான தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை ஆகியவற்றை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது அதே வேளையில் தகுதியுடைய பயிற்சி பெறுவோர் பரிந்துரைக்கப்பட்ட தர நிலைகளுக்கு உகந்த வகையில் தங்களுடைய தகுதிகளையும், திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள கட்டமைக்கப்பட்ட வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இதையடுத்து தேசிய இணை, சுகாதாரப் பணி ஆணையச் சட்டம் 2021-ன் கீழ் உருவாக்கப்பட்ட இணை, சுகாதாரப் பணியாளர்களின் தற்காலிக பதிவுக்கான வரைவு ஒழுங்குமுறைகள் 2026 தொடர்பாக பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களும் கருத்து தெரிவிக்குமாறு தேசிய இணை சுகாதாரப் பணி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தற்காலிக பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள், வழக்கமான பதிவுக்கான தேவைகளுக்காக திறன் மேம்பாட்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட இணைப்பு படிப்புகள், மேற்பார்வையிடப்பட்ட மருத்துவப்பயிற்சி, தேவைப்படும் குறைந்தபட்ச தகுதித் தேர்வுகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் இந்த ஒழுங்குமுறைகள் அளிக்கின்றன.

Read the full e-paper

Translate »