hello madras mobile banner 1200x300

சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை வெற்றிகரமாக தூய்மைப்பணிகளை மேற்கொண்டது

சென்னை – 11 நவம்பர், 2026 சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டது.

45,000 நேரடி கோப்புகளை ஆய்வு செய்து 43,952 கோப்புகளை நீக்கியது. 55,000 மின் கோப்புகளை ஆய்வு செய்து 51,230 மின் கோப்புகளை நீக்கியது. பழையப்பொருட்களையும், பயன்படுத்தப்படாத பொருட்களையும் அகற்றியதன் மூலம் 19.35 லட்சம் சதுர அடி அளவிலான பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. பழையப்பொருட்களையும், மின் கழிவுகளையும் அகற்றியதன் மூலம் ரூ.22.19 கோடி வருவாய் ஈட்டியது. 136 பொது மக்களின் குறைகளுக்கும், 17 மேல் முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மிக முக்கிய நபர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 11 பரிந்துரைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Read the full e-paper

Translate »