கொல்கத்தா – 11 நவம்பர், 2026 கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாங்காக்கிற்குப் பயணம் செய்யவிருந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 2026 நவம்பர் 6 அன்று சோதனையிட்டனர். அவர்களில் சிலரது உடமைகள் மற்றும் கைப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்டு உள்ளிட்ட ரூ.3.12 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை (கரன்சி) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குறிப்பிட்ட நபர்கள் புத்தகங்கள், பைகள், காலணிகள் மற்றும் துணிகளுக்குள் அதிநவீன முறையில் பணத்தை மறைத்துக் கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சுங்கச் சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பயணிகளிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
