hello madras mobile banner 1200x300

தில்லியில் யமுனை நதியில் சொகுசுப் படகுச் சுற்றுலா

சென்னை – 11 நவம்பர், 2026 தில்லியில் யமுனை நதியில் சொகுசுப் படகுச் சுற்றுலா: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.

தில்லி சோனியா விஹாரில், யமுனை நதியின் முதல் சுற்றுலா படகு சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா முன்னிலையில் இன்று ( 2026 நவம்பர் 10) தொடங்கி வைத்தார்.

சோனியா விஹார் – ஜகத்பூர் இடையே சுமார் 6 கிலோ மீட்டல் தூரம் சென்று திரும்பும் வகையில், 30 பேர் பயணிக்கக்கூடிய மின்சார சொகுசுப் படகு இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், தில்லியின் சுற்றுலாவையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

யமுனை நதியின் வரலாறு, ஆன்மிகச் சிறப்புகளை விளக்கும் இசை, ஒளி, ஒலி நிகழ்ச்சிகள், இசை நீரூற்று ஆகியவை முக்கியமாக இதில் இடம்பெறுகின்றன. உணவகங்கள், கடைகள், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, சறுக்கு விளையாட்டு, பாறையேற்றம், மிதக்கும் படகுத்துறைகள், கழிப்பறைகள், காத்திருப்பு அறைகள், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Read the full e-paper

Translate »