சென்னை – 10 நவம்பர், 2026 மத்திய மின்துறை அமைச்சகம் சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6 மூலம், 2026 அக்டோபர் 2 முதல் 31- ம் தேதி வரை தூய்மைப்பணி, குறைதீர்ப்பு பணிகள் நடைபெற்றன. 342 இடங்களில் தூய்மைப்பணி நடைபெற்ற நிலையில், மின்னணு கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 15.47 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆவணங்கள் மேலாண்மை மூலம், 13,282 கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல் 34,525 மின்னணு கோப்புகள் நீக்கப்பட்டன. இதுதவிர, பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்த மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. சமூக ஊடங்கள் வாயிலாக சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தூய்மைப்பணி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
