hello madras mobile banner 1200x300

உத்தராகண்ட் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை – 10 நவம்பர், 2026 உத்தராகண்ட் நிறுவன தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

தேவ பூமியான உத்தராகண்ட் ஆன்மீக பாரம்பரியத்துடனும், சிறந்த இயற்கை அழகுடனும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கண்ணைக்கவரும் மலைப்பகுதிகள், புனித நதிகள், போற்றக்கூடிய புனிதத் தலங்கள், மகத்துவம் மிக்க கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை அம்மாநிலத்தின் சிறப்பு வாய்ந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.

கடினமாக உழைக்கக்கூடிய, திறமைமிக்க, முற்போக்கு சிந்தனையுடைய மாநில மக்களின் தீவிர பங்களிப்புடன் உத்தராகண்ட் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியின் உச்சத்தை எட்டுவதாக மோடி கூறினார். அம்மாநிலம் தொடர்ந்து விரைவான முன்னேற்றத்தை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சி, அமைதி, செழுமை ஆகியவை பெருகட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

Read the full e-paper

Translate »