சென்னை – 10 நவம்பர், 2026 சென்னை, வியாசர்பாடி, தமோதரன் நகர், 2வது தெருவில் வசித்து வரும் கார்த்திக், வ/37, என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த 04.11.2026 அன்று இரவு வேலை முடித்து அவரது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, மறுநாள் (05.11.2026) காலை வந்து பார்த்தபோது, யாரோ அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்ததாகவும், மேற்படி திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தனது இருசக்கர வாகனத்தை மீட்டு தரும்படியும் கார்த்திக் என்பவர் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
P-5 எம்.கே.பி. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த எதிரி முகேஷ் (எ) பல்சாமான், வ/21, தாமோதரன் நகர் 3வது தெரு, வியாசர்பாடி, சென்னை என்பவரை நேற்று (08.11.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் ஆக்டிவா இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.
விசாரணையில் எதிரி முகேஷ் (எ) பல்சாமான் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி முகேஷ் (எ) பல்சாமான் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
