சென்னை – 10 நவம்பர், 2026 உச்சநீதிமன்ற ஆணை மற்றும் தமிழக அரசின் வழகாட்டுதல்கள்பேரில், தீபாவளியை முன்னிட்டு, சென்னை பெருநகரில் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ், உத்தரவின்பேரில், காவல் உயரதிகாரிகள் அறிவுரையின்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் தங்களது காவல் நிலைய எல்லைக்குள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நேற்று (08.11.2026) தீபாவளியை முன்னிட்டு கனம் உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 148 வழக்குகளும், உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 79 வழக்குகளும் என மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
